Published : 04 Aug 2018 08:57 AM
Last Updated : 04 Aug 2018 08:57 AM
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்கு முன்ன தாக விராட் கோலி கூறிய வார்த்தை கள்.. எந்த மைதானத்திலும் நான் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பதுதான். பல்வேறு நாட்டு மைதானங்களில் விராட் கோலி ரன் வேட்டையாடிய போதிலும் இங்கிலாந்து மைதானங்கள் மட்டும் ஏனோ அவருக்கு வஞ்சகமே செய்திருந்தது. எனி னும் அதை அவர், அதிகம் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
2011-ம் ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதி ராக விராட் கோலி அறிமுகமானபோது இளம் வீரராக அவர், எதிர்பார்ப்புகளை நிறை வேற்றத் தவறினார். வேகம் மற்றும் பவுன்ஸ் பந்து களை எதிர்கொள்வதில் கோலி சிரமத்தை சந்தித்ததால் இதன் பின்னர் நடைபெற்ற இங்கி லாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடும் லெவனில் விராட் கோலி தனது இடத்தை இழந் தார். ஜாம்பவான்களான சீனியர் வீரர்கள் பலர் இடம் பெற்றிருந்த போதிலும் அந்தத் தொடரை இந்தியா 0-4 என படுமோசமாக இழந் தது. இதை விராட் கோலி வெளியே இருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.
ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் விராட் கோலிக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 5 டெஸ்ட்களிலும் விராட் கோலியால் 13.4 சராசரியுடன் வெறும் 134 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந் தது. பெரும்பாலும் அவர், ஜேம்ஸ் ஆண்டர் சனின் வேகம் நிறைந்த ஸ்விங் பந்துகளுக்கு இரையாகியிருந்தார். சரி தற்போது எட்ஜ்பாஸ் டன் டெஸ்ட் போட்டிக்கு வருவோம்..
2-வது நாளான நேற்று முன்தினம் விராட் கோலி மட்டையுடன் களமிறங்கிய போது இடது கை வேகப்பந்து வீச்சாளரான சேம் கர்ரனின் துல்லியமான பந்துகளுக்கு ஷிகர் தவண், முரளி விஜய், கே.எல்.ராகுல் காவு வாங்கப்பட்டிருந்தனர். ஷிகர் தவண், முரளி விஜய் ஜோடி ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு ஆகியோரை தடுத்து ஆட்கொண்டு விளை யாடிய நிலையில் இளம் வீரரிடம் வீழ்ந்தனர்.
59 ரன்களுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடையை கட்டிய நிலையில் விராட் கோலிக்கு ஆண்டர்சன் கடும் அச்சுறுத்தல் கொடுத்தார். அவருக்கு எதிராக விராட் கோலியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, கடுமையாக பீட்டன் ஆனார். பந்துகள் ஸ்லிப் திசையில் பீல்டர் கைகளுக்குச் செல்லாமல் பல முறை முன்னதாகவே விழுந்தது, சில வேளைகளில் ஸ்லிப் பீல்டர்கள் டைவ் அடித்தாலும் பந்து தாண்டி பவுண்டரிக்குச் சென்றது.
மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆண்டர்சன் வீசிய இரு ஸ்பெல்களில் விராட் கோலி மட்டும் 43 பந்துகளை சந்தித்தார். இதில் 41 பந்துகளை டாட் பால்களாக விட்டிருந்தார் கோலி. 2 பந்துகளில் மட்டுமே ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு முறை இரு ரன்களும், ஒரு முறை பவுண்டரியும் அடித்தார். இந்த இரு ஷாட்களும் மட்டையின் விளிம்பில் பட்டு சென்றதுதான்.
விராட் கோலி, ஆண்டர்சன் இடை யிலான போராட்டம், வர்ணணையாளர்களுக் கும், மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுக்கும் கடும் தீனியாக இருந்தது. எனினும் விராட் கோலி முதலில் ஒன்றை நிரூபித்தார். 2014-ம் ஆண்டு தொடரில் மோசமாக விளையாடிய சுவடு களின் எண்ணங்கள் அவரது மனதில் தலை தூக்காமல் பார்த்துக் கொண்டதுடன், வலுவான மனரீதியுடன் ஆண்டர்சனை எதிர்கொண் டார். பின்னர் பேட்டிங்கில் தனது முதிர்ச்சியை காட்டினார். 21 ரன்களில் இருந்த போதும், அரை சதம் அடித்த போதும் விராட் கோலி கொடுத்த கேட்ச்சை டேவிட் மலான் தவறவிட் டார். முன்னதாக விராட் கோலி ரன் கணக்கை தொடங்காமல் இருந்த போது ஜாஸ் பட்லரும் கேட்ச்சை கோட்டை விட்டிருந்தார். 3 முறை விராட் கோலிக்கு வாழ்வு வழங்கியதற்கான பலனை இங்கிலாந்து அணி அனுபவித்தது.
மாறாக பொன்னான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட விராட் கோலி கடைசி கட்டத்தில் எதிர்முனையில் விக்கெட்கள் விழுந்துவிடக் கூடாது என்பதில் ஒரு கேப்டனாக அதிகம் அக்கறை செலுத்தினார். அதிலும் அஸ்வின் வெளியேறிய போது ஸ்கோர் 169/7 என இருந்தது. இதன் பின்னர் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகிய டெய்ல் எண்டர்கள் உதவியுடன் 105 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் விராட் கோலி சேர்த்த ரன்கள் மட்டும் 92 ஆகும். 169 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை நெருங்கியது (13 ரன்கள் குறைவு) என்பது விராட் கோலியுடன் போராடும் குணத்தால் மட்டுமே சாத்தியமானது.
எப்போதும் களத்தில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யக்கூடிய விராட் கோலி இந்த இன்னிங் ஸில் மாயமாகியிருந்தார். ஆனால் மன வலிமையுடனும், அதேவேளையில் ஆதிக்க குணத்தை அடக்கியும் வேறு ஒரு பரிமாணத் தில் விராட் கோலி பேட் செய்த விதம், இது ஆரம்பம்தான் இனிமேல் தான் இருக்கிறது என்ற மனோபாவத்தை பிரதி பலிக்கச் செய்வதாகவே இருந்தது.
சதம் அடித்த பிறகு விராட்கோலியின் ஆட்டம் வேறு பாதையில் பயணித்தது. இங்கி லாந்து அணி பீல்டிங்கை பரவலாக்கிய போதிலும், உமேஷ் யாதவுக்கு அதிகம் ஸ்ட்ரைக் வராமல் தானும் பெரிய ரிஸ்க் எடுக்காமல் சரியான இடைவெளிகளை கண்டறிந்து பவுண்டரி களை அடித்தார். அதிலும் அடில் ரஷித் பந்தில் சிக்ஸர் விளாசியது அபாரம். இங்கி லாந்து ஆடுகளங்களில் விராட் கோலியின் பலவீனமாக கருதப்பட்டது ஸ்விங் மற்றும் சீம் பந்துகளுக்கு எதிராக சரியான வகையில் கால் நகர்வுகளை கொண்டிருக்க மாட்டார், ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்படும் பந்துகளை தொட்டு எட்ஜ் ஆகி ஆட்டமிழப்பார் என்பதுதான். இந்த வகையில் விராட் கோலி அதிகமுறை பீட்டன் ஆனார். அவரை தவறு செய்ய அதிக முறை ஆண்டர்சன் தூண்டி னார். ஆனால் அவற்றை கோலி தடுத்து ஆட்கொண்டார்.
இன்னிங்ஸ் முழுதுவம் மணிக்கட்டை தளர்த் தியும் இறுக்கிப் பிடித்தும், முன்னால் வந்தும் பின்னால் சென்றும் அவர் விளையாடிய ஷாட்கள், தடுப்பாட்டங்கள் நீண்ட காலத் துக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். ஒரு போராளியாக விராட் கோலி சேர்த்த 149 ரன்கள் தான் இங்கிலாந்து அணியை பெரிய அளவில் முன்னிலை பெறவிடாமல் தடுத்தது. விராட் கோலி சேர்த்த ரன்களை நீக்கி பார்த் தால் இந்திய அணியின் ஆட்டத்தில் ஒன்றும் இல்லை. சிறந்த கேப்டனாக, அணியை கரை சேர்க்க வேண்டிய இக்கட்டான சூழ லில் எதிரணியின் கணைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து சக வீரர்களுக்கு முன்னு தாரணமாக திகழ்ந்துள்ள விராட் கோலி வேறு ஒரு உச்சத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளார்.
‘பெரிதினும் பெரிதில்லை’
எட்ஜ்பாஸ்டனில் அடித்த சதத்தை சிறப்பான தாக கருதவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை எட்ஜ்பாஸ்டனில் நான் இப்போது அடித்த சதம் எனக்குச் சிறப்பானது எனக் கருதவில்லை. அப்படி சிறப்பானதா என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடந்த 2014-ம் ஆண்டு அடிலெய்டில் நான் அடித்த சதத்தை இன்னும் என்னால் மறக்க முடியாது.
அந்தச் சதம் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். 2-வது இன்னிங்ஸில் 364 ரன்களை சேஸிங் செய்தபோது நான் அடித்த அந்தச் சதம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் இப்போது அடித்த சதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், சிறப்பானதாக எண்ணவில்லை.
நான் சதம் அடித்ததை பெரிய விஷயமாகக் கருதவில்லை. நான் எப்படியும் இந்திய அணியைக் குறைந்தபட்சம் 15 ரன்கள் முன்னிலை பெற வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அதற்குள் நான் ஆட்டமிழந்தது எனக்கு வேதனையளிக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டி உடற்தகுதிக்கும், மனத்தகுதிக்கும் நடக்கும் சோதனையாகும். ஆனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயித்த ஸ்கோருக்கு அருகே வந்துவிட்டோம் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
குறிப்பாகக் கடைசி வரிசையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இசாந்த், உமேஷ் ஆகியோர் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக பேட் செய்தார்கள். அணியை நல்ல இலக்கை நோக்கிக் கொண்டு செல்ல எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT