Published : 20 Aug 2018 03:45 PM
Last Updated : 20 Aug 2018 03:45 PM
3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 54/0 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்து அடுத்த 158 பந்துகளில் ஆல் அவுட் ஆகி 161 ரன்களுக்கு மடிந்தது.
ஆட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும் கேப்டன் விராட் கோலி பவுலர்களை கடுமையாக உத்வேகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அவர் உத்வேகமூட்டியதில் சில ஸ்டம்ப் மைக்குகளில் பதிவாகியுள்ளது.
அவற்றில் சில:
மொகமது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வீசி ஒரு பந்தை நல்ல லெந்தில் உள்ளே கொண்டு வர இங்கிலாந்து பேட்ஸ்மென் சரியாக ஆடவில்லை இதனையடுத்து விராட் கோலி “அந்த இடம்தான் அந்த இடத்திலேயே பிட்ச் செய்” என்றார்.
அதே போல் மீண்டும் ஷமி அதே இடத்தில் வீச “பிரில்லியண்ட் ஷமி” என்றார்.
ஜெனிங்ஸ், குக் நன்றாக பேட் செய்து கொண்டிருந்த போது, “அவர்களை விட்டு விடாதீர்கள், அவர்களைக் கடினமாக எதிர்கொள்ளுங்கள், கீப் கமிங் அட் தெம்” என்று கத்தி உத்வேகம் அளித்தார்/
அதே போல் ஜஸ்பிரித் பும்ரா வீசும்போது, லெக் திசையில் கை காட்டி, “நான் அஸ்வினை அந்த இடத்துக்கு நகர்த்துகிறேன் ஷார்ட் பிட்ச் பந்துகள் அங்கு செல்லும்” என்றார்.
ஜெனிங்ஸ் பும்ரா பந்தை கால்காப்பில் வங்க பெரிய முறையீடு எழுந்த போது, “என்ன அது பேட்டில் படவில்லைதானே? அல்லது ஸ்டம்புக்கு வெளியே கால்காப்பில் பட்டதா?” என்று கேட்க பும்ரா பந்து மேலே செல்லும் என்று சைகை செய்தார்.
9 விக்கெட்டுகள் விழுந்து பட்லர் ஆடிக் கொண்டிருந்த போது, ‘இன்னும் ஒரு விக்கெட்தான் பாய்ஸ் நமக்குத் தேவை இன்னும் ஒரே விக்கெட்’என்றார்.
ஹர்திக் பாண்டியா, பட்லருக்கு வீசிய போது, “6 பந்துகளுக்கும் பட்லருக்கு களவியூகம் பரந்தே இருக்கட்டும்’ என்று பாண்டியா கேட்டதற்கு கைதட்டி ஆமோதித்தார். பிறகு ஒரு ஃபுல் லெந்த் பந்தை பாண்டியா வீச, கோலி “இன்னும் கொஞ்சம் ஷார்ட் ஆக பிட்ச் செய், கீப் இட் ஷார்ட்டர் என்றார்.
“உண்மை என்னவெனில் பாய்ஸ் இந்த செஷனில் 9 விக்கெட்டுகள்.. அதைப் பார்க்க விரும்புகிறீர்களா ஒரு செஷனில் 9 விக்கெட்டுகள் பாய்” என்று உற்சாகமூட்டியபடியே இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT