Published : 30 Jul 2018 08:39 PM
Last Updated : 30 Jul 2018 08:39 PM

யோ-யோ டெஸ்ட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்: வலுவான உடற்தகுதி வீரர் யார் தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான பெரிய டெஸ்ட் தொடரில் நாளை மறுநாள் களமிறங்குகிறது இங்கிலாந்து, இந்நிலையில் யோ-யோ பரீட்சை நடைபெற்றது. இதில் நாம் இந்த வீரர்தான் இங்கிலாந்தில் சிறப்பு, வலு உடற்தகுதி வீரர் என்று கற்பனை செய்திருந்தால் அது தவறு.

பென் ஸ்டோக்ஸ் எனலாம், ஜானி பேர்ஸ்டோ எனலாம் இன்னும் புதிய வீரர்கள்ப் பெயரைக்கூடக்கூறலாம், ஆனால் யோ-யோவில் சிறப்பான உடற்தகுதி வீரராக அந்த அணியின் மூத்த வீரர் அலிஸ்டர் குக்தான் வென்றார்.

33 வயதாகும் அலிஸ்டர் குக் மேலும் கடினமான யோ-யோ டெஸ்ட்டை முடித்த கையோடு 3 கிமீ தூரத்துக்கு மேல் ஓடிக்காட்டியுள்ளார். மற்ற வீரர்கள் யோ-யோ டெஸ்ட்டிலேயே களைப்படைந்து ஓய்வு எடுக்க குக் மட்டும் 3 கிமீ தூரம் ஓடி அதிசயிக்க வைத்துள்ளார்.

இங்கிலாந்தில் யோ-யோ டெஸ்ட்டில் தேறுவதற்கான ஸ்கோர் 19 ஆகும்.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய் ஆகியோர் மிகவும் அத்லெட்டிக்காக இருந்தாலும் அலிஸ்டர் குக் இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டார்.

இப்போது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே அலிஸ்டர் குக் யோ-யோ டெஸ்ட் போட்டியில் மற்றவர்களை வெகு எளிதில் கடந்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஃபிட்டஸ்ட் கிரிக்கெட் வீரர் தற்போது அலிஸ்டர் குக் தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x