Published : 01 Jul 2018 03:24 PM
Last Updated : 01 Jul 2018 03:24 PM
டேல் ஸ்டெய்ன் தன் கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த வீரர்களுடன் ஆடியுள்ளார், பந்து வீசியுள்ளார், அவரது நோக்கில் அவரது சிறந்த உலக டெஸ்ட் லெவன் அணியை கனவு அணி என்று தேர்வு செய்துள்ளார்.
இந்த அணிக்கு தன் கேப்டன் கிரேம் ஸ்மித்தையே அவர் கேப்டனாகத் தேர்வு செய்துள்ளார். காரணம் தான் அவரின் கீழ் ஆடியது 60 டெஸ்ட் போட்டிகள் என்கிறார். அவர் தொடக்க வீரராக 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார். ஆகவே அவர்தான் கேப்டன் தொடக்க வீரர்.
ஏற்கெனவே கிரிக் இன்போவின் கடந்த 25 ஆண்டுகளுக்கான சிறந்த அணியிலும் சேவாக், மேத்யூ ஹெய்டனுடன் தொடக்க வீரராகச் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏன் சேவாக்?
சேவாகை இன்னொரு தொடக்க வீரராகத் தேர்வு செய்த ஸ்டெய்ன் அதற்கானக் காரணத்தைக் கூறும்போது, “சேவாகுக்கு வீசுவது கடினம், 6 பந்துகளில் அவர் பிரித்து மேய்ந்து விடுவார், அப்போது நம் கேப்டன் நம்மருகே வந்து கொஞ்சம் அமைதியாகி வீசு என்று கூற வேண்டிவரும். இந்தியாவில் அதிகம் ஸ்விங் ஆகாது, அவர் கவர், பாயிண்ட் திசையில் வெளுத்து வாங்குவார், ஒவ்வொரு முறையும் பந்தை நன்றாக மிடில் செய்வார்.
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் கொஞ்சம் பந்து ஆதிக்கம் செலுத்தும். ஒரு முறை நான் சேவாகை தேர்ட் மேன் கேட்சில் வீழ்த்தினேன் அது டெஸ்ட் போட்டியின் முதல் பந்து. இது அடிக்கடி நடக்காது. எங்களுக்கு எதிராக சென்னையில் 300 அடித்தார்” என்றார்.
ஸ்டெய்ன் கனவு அணி வருமாறு:
கிரேம் ஸ்மித் (கேப்டன்), சேவாக், ஹஷிம் ஆம்லா, சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலீஸ், குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஏ.பி.டிவில்லியர்ஸ், ஆண்ட்ரூ பிளிண்டாப், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா.
12 மற்றும் 13ம் வீரர் ஆலன் டோனால்ட், ஜாண்ட்டி ரோட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT