Published : 04 Jul 2018 08:18 AM
Last Updated : 04 Jul 2018 08:18 AM

பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை தரையிறக்கியது குல்தீப்பின் ஒரு ஓவர்: கோலி புகழாரம்

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அதிரடி இங்கிலாந்தை சாதாரண கட்டினபசுவாக்கினார் தனது இடது கை ரிஸ்ட் ஸ்பின் மூலம் குல்தீப் யாதவ். இந்தியா தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதனால் 50/0 என்று இருந்தவர்கள் 107/5 என்று சரிந்தனர். ஒரே ஓவரில் இயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோரை மிக அருமையாக வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.

இங்கிலாந்து வீரர்கள் இவரை நின்று ஆடி, மரியாதை கொடுக்க விரும்பவில்லை, பதற்றமடைந்து தப்பும் தவறுமான ஷாட் தேர்வில் வெளியேறினர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் இதனால் மடமடவென சரிய நேரிட்டது.

அதன் பிறகு கே.எல்.ராகுலுக்குக் கேட்ச் விட்டார் ஜேசன் ராய், அதன் பலனை அனுபவித்தனர், அவர் மொயின் அலி, லியாம் பிளங்கெட் ஆகியோரைப் பதம் பார்த்து இரண்டாவது டி20 சதம் எடுத்து வெற்றி நாயகனானார். இதில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

3 விதமான திறன் அமைப்பை நோக்குகிறேன். நாங்கள் எப்படி ஆடினோம் என்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய வீர்ர்களைக் களமிறக்க விரும்புகிறோம், அந்த வகையில்தான் கே.எல்.ராகுல் 3ம் நிலையில் இறங்கினார். நான் 4ம் நிலையில் இறங்கினேன்.

ரன் விகிதத்தில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தை தரையிறக்கியது குல்தீப்பின் அந்த ஒரு ஓவர். அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் எந்த ஒரு பிட்சிலும் அவர் நிச்சயம் அபாயகரமாகத் திகழ்வார். பந்தை உள்ளே கொண்டுவருவது, வெளியே கொண்டு செல்வது என்று பலதினுசுகளில் அவர் வீசும் போது ராங் ஒன் பந்தை கணிப்பதும் புரிந்த் கொள்வதும் கடினம். இதே திறமையில் அவர் மேலும் வளர்ச்சியடைந்து பேட்ஸ்மெனை எப்போதும் யோசனையில் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்து 30-40 ரன்கள் குறைவாக எடுத்தது குறித்து மகிழ்வே. ராகுலின் இன்னிங்ஸ் நம்ப முடியாத அதிரடியாகும். மிகவும் துல்லியமாகவு, நீட்டாகவும் அடிக்கிறார். பேட்டிங்கை வலுவாக்க இவரைப்போன்ற ஆட்டக்காரர்கள் தேவை. அவர் நல்ல வடிவத்தில் உள்ளார், அருமையான உத்தி, நல்ல பொறுமை, அவர் ஆட வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறார். அவரது கடைசி சதம் கூட இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் அடித்ததுதான்.

அதிகம் மாற்றம் செய்யவில்லை, நான் நம்பர் 4ற்கு வந்துள்ளேன். இதனால் நடுவரிசையைக் கட்டுப்படுத்த முடியும். பவர் ப்ளேயில் ராகுல் சுதந்திரமாக ஆட வேண்டும், நடுவில் மூத்தவர்கள் இருக்கிறோம், ஆகவே சில வீரர்களுக்கு இத்தகைய சுதந்திரத்தை வழங்குவதை விரும்புகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x