Last Updated : 01 Jul, 2018 01:09 PM

 

Published : 01 Jul 2018 01:09 PM
Last Updated : 01 Jul 2018 01:09 PM

உலகக்கோப்பை வெளியேற்றத்துக்குப் பிறகு என்ன? - வாய்திறவா கிறிஸ்டியானோ ரொனால்டோ

உலகக்கோப்பைக் கனவு இன்னொருமுறை சிதைய தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகலுக்கு ஆடுவாரா அல்லது கிளப் கால்பந்துடன் நிறுத்திக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்களான போர்ச்சுகல் ரொனால்டோவின் ஹாட்ரிக்குடன் ஸ்பெயினுக்கு எதிராக 3-3 டிரா மூலம் ஆழமாகச் செல்லும் அணியாக தெரிந்தது, ஆனால் ரொனால்டோ தவிர அங்கு வேறு எவரும் சிறப்பாக ஆடுவது போல் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று நாக் அவுட் சுற்றில் உருகுவேயின் தடுப்பு வியூகத்தை உடைக்க முடியாமல் நாக்குத் தள்ளி, கவானியின் இரு அற்புத கோல்களினால் வெளியேறியது.

2022-ல் அடுத்த உலகக்கோப்பையின் போது ரொனால்டோவுக்கு வயது 38 ஆகியிருக்கும்.

இந்நிலையில் ரொனால்டோ கூறியிருப்பதாவது:

எதிர்காலம் பற்றி பேசுவதற்கு இதுவல்ல நேரம். இது மட்டுமல்ல வீர்ர்கள், பயிற்சியாளர் என்று யாரைப்பற்றியும் எதுவும் கூற இது தருணமல்ல.

ஆனால் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக் போர்ச்சுகல் தொடர்ந்து திகழும் என்று நான் உறுதியளிக்கிறேன். இளமையும் லட்சியமும் கொண்ட அணி நம்மிடம் உள்ளது” என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.

2006 முதல் பார்த்தால் ரொனால்டோ, மெஸ்ஸி இருவருமே உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் கோல் அடித்ததில்லை என்பதே கசப்பான உண்மை.

ரொனால்டோ பற்றி உருகுவே கோச் ஆஸ்கார் தபரேஸ் கூறும்போது, “ரொனால்டோ ஒரு தனித்துவ வீரர். அவர் அவர்களது தலைவர், கேப்டன், ஆனால் எங்களுக்கு எதிராக அவர் வெற்றியடையாமல் இருக்க கவனம் செலுத்தினோம், ஆனாலும் அது கடினம்தான்” என்றார்

போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கூறும்போது, “அவர் தொடர்ந்து போர்ச்சுகலுக்காக ஆடுவார் என்று நிச்சயம் நம்புகிறேன், கால்பந்தாட்டத்துக்குக் கொடுக்க அவரிடம் இன்னும் நிறைய உள்ளது

இன்னொரு தொடர் செப்டம்பரில் தொடங்குகிறது அதில் ரொனால்டோ இளம் வீரர்கள் வளர உதவுவார், இளம் வீரர்கள் நிறைய உள்ளனர், அவர்களுக்கு இவரைப் போன்ற கேப்டன் தேவை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x