Last Updated : 28 Jul, 2018 12:20 PM

 

Published : 28 Jul 2018 12:20 PM
Last Updated : 28 Jul 2018 12:20 PM

40 நிமிடங்களில் ஆட்டம் முடிந்தது; காட்டடி பேட்டிங் செய்த கப்தில்: 38 பந்துகளில் 108 ரன்கள் விளாசல்

இங்கிலாந்தில் நடந்த கவுண்டி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் பொளந்து கட்டிய நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து 40 நிமிடங்களில் வோர்செஸ்டர்ஷையர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி, 188 ரன்கள் குவித்தது.

189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வோர்செஸ்டர்ஷையர் அணி 13.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வோர்செஸ்ட்டர்ஷையர் அணியில் இடம் பெற்று தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் நார்த்தாம்டன்ஷையர் அணி வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார்.

20 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் அடித்து கப்தில் மிரள வைத்தார். ஆனால், தொடர்ந்து நீடிக்காத கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இவர் கணக்கில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். கப்திலுக்கு உறுதுணையாக பேட் செய்த கிளார்க் 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே ஓவரில் வோர்செஸ்டர்ஷையர் அணி 97 ரன்கள் குவித்தது. 10 ஓவர்களில் 162 ரன்கள் குவித்தது வோர்செஸ்டர்ஷையர் அணி.

காட்டடி அடித்த கப்தில், ரிச்சர்ட் கிளீஸன் வீசிய ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 22 ரன்கள் விளாசினார். டி20 போட்டியில் இதுவரை அதிகவேகமாக, குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் தக்கவைத்துள்ளார்.

2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் கெயில் சதமடித்தார். அதன்பின் வேகமாகச் சதம் அடித்தவர்கள் பட்டியலில் கப்தில் இடம் பெற்றுள்ளார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் அடித்தவர்கள் பட்டியலிலும் கப்தில் இடம் பெற்றுள்ளார். இதில் சச்சின், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, கெயில், பக்கர் ஜமன் ஏற்கெனவே உள்ளனர்.

“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x