Published : 17 Aug 2014 12:36 PM
Last Updated : 17 Aug 2014 12:36 PM

மட் பிரையருக்கு அறுவை சிகிச்சை

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மட் பிரையர் தனது குதிங்கால் தசைநாரில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அடுத்த மாதம் அறுவை சிகிச்சை செய்யவுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் விளையாடிய மட் பிரையர், பின்னர் காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் அவர் கூறியிருப்பதாவது:

எனது குதிங்கால் காயம் இப்போதும் எனக்கு வலியை தந்துகொண்டிருக்கிறது. அதற்காக சிறப்பு நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் என எல்லோரையும் சந்தித்து ஆலோசனை பெற்றுவிட்டேன். காயத்துக்காக வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கிறேன் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x