Published : 21 Jul 2018 05:26 PM
Last Updated : 21 Jul 2018 05:26 PM
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர், உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நகரில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு ஒரு ஆண்டு தடைவிதித்து ஆஸ்திரேலிய வாரியம் உத்தரவிட்டது.
இதனால், ஐபிஎல் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் பங்கேற்க முடியாமல் போனது. மேலும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்நாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்காமல், கனடாவில் நடந்த டி20 போட்டியில் மட்டும் இருவரும் விளையாடினார்கள்.
இந்நிலையில், சில மாதங்களுக்குப் பின் உள்நாட்டுப் போட்டிகளில் வார்னர் விளையாடத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடக்கும் ஸ்டிரைக் லீக் ஒருநாள் போட்டித் தொடரில் சிட்டி சைக்ளோன் அணிக்காக வார்னர் விளையாடினார்.
டார்வின் நகரில் உள்ள மராரா கிரிக்கெட் மைதானத்தில் நார்த் டைட் அணிக்கு எதிராக சிட்டி சைக்ளோன்ஸ் அணி இன்று மோதியது. இதில் சிட்டி சைக்ளோன்ஸ் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய வார்னர் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோருக்கு ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாட மட்டுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. உள்நாட்டுப் போட்டிகள் குறித்துக் கூறவில்லை. ஆனால், கடந்த 3 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்த வார்னர் முதல்முறையாக உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT