மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே | CSK vs MI

மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே | CSK vs MI

Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் இறங்கிய சிஎஸ்கே அணி 177 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா இன்னிங்ஸை தொடங்கினர். ரஷீத் 19 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களும் எடுத்தனர்.

புதியவரான ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். அடுத்து இறங்கிய ஜடேஜா, துபே இருவரும் அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் தோனி, ஜேமி ஓவர்டன் இருவரும் தலா 4 ரன்கள் எடுத்தனர். இப்படியான 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in