Published : 26 Mar 2025 03:00 PM
Last Updated : 26 Mar 2025 03:00 PM

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷுப்மன் கில்லின் முடிவு

ஐபிஎல் 2025 தொடரில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின, ஹை ஸ்கோரிங் மேட்ச் ஆன இந்தப் போட்டி விறுவிறுப்பான கிளைமாக்ஸில் குஜராத் டைட்டன்ஸ் 11 ரன்கள் பின்னடைவு காண பஞ்சாப் கிங்ஸின் அபார வெற்றியில் முடிந்தது.

இந்தப் போட்டியில் அணித்தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணித்தேர்வில் இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை அணியில் தேர்வு செய்யாமல் விட்டது நம் ரசிகர்களை மட்டுமல்ல, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாஷிங்டன் சுந்தரின் பவர் ப்ளே பவுலிங்கும், அதை விடுத்தால் மிடில் ஓவர் பவுலிங்கும், அவரது பின் வரிசை பேட்டிங்கும் எந்த அணியிலும் அவர் பிளேயிங் லெவனிலிருந்து உட்கார வைக்கச் செய்யாது. எந்த அணிக்கும் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஒரு பயனுள்ள ஆல்ரவுண்டரை அணியில் எடுக்காமல் பெஞ்சில் வைக்காது.

இந்நிலையில் அதாவது புஷ்கர் என்னும் கிரிக்கெட் ரசிகர் தன் எக்ஸ் தளத்தில் இந்திய அணியின் 15 வீரர்களில் ஒருவராக இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் லெவனில் இடம்பெறுவதற்கு தகுதியற்றவராகி விடுகிறாரா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவரது கேள்வியை பலரும் ஆமோதித்தும் ஐபிஎல் கிரிக்கெட்டின் விசித்திர இம்பாக்ட் பிளேயர் விதியினால் இப்படி ஆகிவிடுகிறது என்று சிலரும் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

இவருக்குப் பலரும் பதில் அளித்துள்ளனர். ஷுப்மன் கில்லை விமர்சித்தும் வருகின்றனர் என்பதெல்லாம் சரி. ஆனால் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை இவருக்குப் பதில் அளிப்பார் என்று சற்றும் புஷ்கர் எதிர்பார்க்கவில்லை.

வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுக்காதது பற்றிய புஷ்கரின் எக்ஸ் தளப் பதிவில் வந்து சுந்தர் பிச்சை பதில் அளிக்கையில், “எனக்கும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது” - “I have been wondering this too." என்று பதிலளித்ததில் புஷ்கர் நெகிழ்ந்து விட்டார்.

நேற்றைய போட்டியில் தொடக்கத்தில் 3 ஓவர்களிலும் பிறகு மிடில் ஓவர்களில் ஒரு 3 ஓவர்களில் வெறும் 18 ரன்களையுமே குஜராத் எடுக்க முடிந்தது இதனால்தான் 11 ரன்களில் தோல்வி தழுவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x