Published : 28 Feb 2025 05:39 AM
Last Updated : 28 Feb 2025 05:39 AM

விதர்பா 379 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பு: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா - கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டேனிஷ் மாலேவர் 138, யாஷ் தாக்குர் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி 123.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டேனிஷ் மாலேவர் 285 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்த நிலையில் பாஸில் பந்தில் போல்டானார்.

யாஷ் தாக்குர் 25, யாஷ் ரத்தோடு 3, கேப்டன் அக்சய் வத்கர் 23, அக்சய் கர்னிவர் 12, நச்சிகேத் பூதே 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேரளா அணி தரப்பில் நிதீஷ், ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். நெடுமங்குழி பாஸில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து விளையாடிய கேரளா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அக்சய் சந்திரன் 14, ரோகன் குன்னுமால் 0, அகமது இம்ரான் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆதித்யா சர்வதே 66, கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்களையும், யாஷ் தாக்குர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 7 விக்கெட்க ள் இருக்க 248 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது கேரளா அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x