Last Updated : 05 Jul, 2018 07:43 PM

 

Published : 05 Jul 2018 07:43 PM
Last Updated : 05 Jul 2018 07:43 PM

டி20 போட்டி: ஆஸிக்கு பதிலடி; 45 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி

பக்கர் ஜமின் அதிரடி ஆட்டத்தால், ஹராரே நகரில் நடந்த டி20 முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.

இங்கிலாந்திடம் தோற்று ஒருநாள் தொடரை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்திருக்கும் மற்றொரு தோல்வியாகும். ஜிம்பாப்வே அணியை நையப்புடைத்து ஆஸ்திரேலிய அணி பெருமைப்பட்டுக் கொண்டாலும், கத்துக்குட்டி அணியை வீழ்த்தி ஒருபோதும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.

பாகிஸ்தான் போன்ற பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சவால் விடுக்கும் அணியிடம் மோதி தொடர்ந்து வெற்றிபெறுவதுதான் ஆஸ்திரேலிய அணியின் முன் இருக்கும் சவாலாகும். ஆனால், முதல் லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை பழிதீர்த்துக்கொண்டது.

இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இந்த தோல்வியும், வெற்றியும் இரு அணிகளுக்கும் எந்தவிதமான மாற்றத்தையும் அளிக்காது. அதேசமயம், வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு தார்மீக ஊக்கத்தையும், ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியையும் அதிகரித்து இருக்கிறது.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பக்கரா ஜமின் அதிரடியாக பேட் செய்து 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் ரன் குவிப்பு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். மற்ற வீர்களான சோயிப் மாலிக்(27), ஹூசைன் தலாத்(30), சர்பிராஸ் அகமது(14) ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் நிலைத்தன்மை இல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் இருந்து வருவது வேதனையாகும். அந்த அணியில் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் மட்டுமே ஓரளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள், மற்ற வீரர்களான ஹெட், ஷார்ட், மேடிஸன், ஸ்டாய்னிஸ் ஆகிய வீரர்களின் பங்களிப்பும், பேட்டிங்கும் மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது. கடந்த போட்டியிலும் மோசமாக இருந்த இவர்களின் பேட்டிங் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.

டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.

195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் ஹாரிஸ் சோஹைல்(8) விக்கெட்டை ரிச்சார்டஸன் பந்துவீச்சில் இழந்தது. ஆனால், 2-வது விக்கெட்டுக்கு பக்கர் ஜமின், தலத் ஆகியோர் கூட்டணி நிலைத்து ஆடினார்கள்.

6-வது ஓவரில் பாகிஸ்தான் 50 ரன்கள் சேர்த்து. 33 பந்துகளைச் சந்தித்த பக்கர் ஜமின் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். தலத் 30 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் போல்டாகினார்.

பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் ஓவருக்கு 10 ரன்கள் என்ற வீதத்தில் சென்றதால், 11-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. ஆனால், அதன்பின் களமிறங்கிய வீரர்கள் நிலைத்து ஆடாமல் விக்கெட்டை பறிகொடுத்ததால், ரன்ரேட் குறைந்தது.

சோயிப் மாலிக்(27), ஹூசைன் தலாத்(30), சர்பிராஸ் அகமது(14)ஸ பாஹீம் ஷரீப்(0) ஆகியோர் நிலைத்து பேட் செய்யாமல் விரைவாக ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. 37 ரன்களுடன் ஆசிப் அலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் ஆன்ட்ரூ டை 3 விக்கெட்டுகளையும், சிர்சார்ட்ஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் பவர்ப்ளேயில்கூட ரன்களைக் குவிக்க முடியவில்லை.

முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல்(10) ரன்னிலும், ஆரோன் பிஞ்ச்(17) ரன்னிலும்வெளியேறியது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.

பவர்ப்ளே ஓவரில் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச்(17) ரன்களிலும், ஹெட் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய நடுவரிசை வீர்கள் ஹெட்(7), மேடிஸன்(5), ஸ்டோய்னிஸ்(16), அகர்(11), டை(12) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் குறிப்பாக ஷாகீன் அப்ரிடி, முகம்மது அமிர் ஆகியோர் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு படம் காட்டும் அளவுக்குப் பந்துவீசினார்கள். ஆஸ்திரேலிய வீரர்களும் பேட்டின் மூலம் தடவத்தான் செய்தார்களேத் தவிர ரன்கள் குவிக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே 45ரன்களில் தோல்வி அடைந்தது. கேரே 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x