Published : 27 Jul 2018 03:07 PM
Last Updated : 27 Jul 2018 03:07 PM
இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடினாலும் பெரிய அளவில் அதில் சோபிக்காமல் பயிற்சி ஆட்டத்திலும் சோபிக்க முடியாமல் தவித்து வரும் ‘இந்தியாவின் அடுத்த திராவிட்’ என்று விதந்தோதப்பட்ட செடேஸ்வர் புஜாரா தான் தன்னைத் தவிர வேறு யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் தி கிரிக்கெட் மந்த்லிக்கு அவர் அளித்த நீண்ட பேட்டியில் அவர் இது குறித்து கூறியதாவது:
இங்கிலாந்தில் ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் உங்களது சராசரி 22 இது உங்களது மனநிலையையும் நீங்கள் இருக்கும் பார்மையும் பிரதிபலிக்கிறதா?
புஜாரா: இல்லை. சிலவேளைகளில் சோபிக்க முடிவதில்லை. ஒரு தனி நபராக என் மீதே நான் அதிக அழுத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடாது, நான் என்னைத் தவிர எதையும் யாருக்காகவும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று உணர்கிறேன்.
கவுண்ட்டி கிரிக்கெட்டிலும் இந்தியா ஏவுக்காகவும் போதுமான ரன்கள் எடுத்தேன் என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன். பெரிய பெரிய சதங்களை எடுப்பது என்பதல்ல. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க எப்போதும் விரும்புவேன். இங்கிலாந்தில் சராசரி ஸ்கோரைப் பார்த்தீர்களானால் இந்தியா போல் இருக்காது. இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-4 சதங்களை எடுக்கலாம், ஆனால் இங்கிலாந்தில் டாப் வீரர்கள் கூட 2 சதங்கள் ஓரிரு அரைசதங்களையே எடுக்க முடிகிறது. ஆகவே சராசரி ஸ்கோர் என்பது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் வேறுபடும்.
ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்: பிட்ச்கள் சவாலானவை, அவுட் ஆகும் தருணங்கள் அதிகம். உத்தியில் சிறுசிறு மாற்றங்கள் தேவை.
எனக்கு அதற்கான பொறுமை இருக்கிறது என்றே கருதுகிறேன். சவாலான சில பிட்ச்களில் ஆடியுள்ளேன். தென் ஆப்பிரிக்காவில் ஜோஹான்னஸ்பர்கில் ஆடும்போது மிகமிகக் கடினமான பிட்ச். ஆனாலும் அதில் அரைசதம் எடுத்தேன். ஆகவே இங்கிலாந்திலும் ரன்கள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இங்கிலாந்து தொடரில் இவ்வளவு ரன்கள் எடுப்பேன் என்ற ரீதியில் நான் பேச விரும்பவில்லை.
இவ்வாறு கூறியுள்ளார் புஜாரா.
பாலாஜிக்கு மறுபடியும் வெளிய ஒரு பிக்பாஸ் வெயிட்டிங் - நித்யா @ தேஜு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT