Published : 27 Jul 2018 07:28 PM
Last Updated : 27 Jul 2018 07:28 PM
கெம்ஸ்போர்டில் இந்திய அணியும் எசெக்ஸ் அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி விராட் கோலி உள்ளிட்டோரின் அரைசதங்களுடன் 395 ரன்கள் எடுக்க எசெக்ஸ் அணி தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்நிலையில் ரன் இயந்திரமான இந்திய கேப்டன் விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் எடுத்தார், பிறகு 93 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஒரு 3 பந்து நீங்கலாக சரளமாகவே ஆடினார், இதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
கோலி அரைசதம் எடுத்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் வால்ட்டரிடம் எட்ஜ் ஆகி 2வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்நிலையில் கோலியின் அரைசதம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட எசெக்ஸ் கவுண்டி அணி, தன் அதிகாரபூர்வ ட்விட்டரில் கோலியைப் பற்றி ஒரு நக்கலான வாசகத்துடன் பதிவிட்டது.
அதன் ஆங்கில வடிவம் வருமாறு: This guy’s not bad at cricket... 50 up for @imVkohli off 67 balls!
அதாவது ‘கிரிக்கெட்டில் இவர் அவ்வளவு மோசமல்ல, 67 பந்துகளில் 50!’ என்று ஒருவாறாக இதனைத் தமிழில் கூறலாம்.
இதன் நக்கல் தொனி கண்டு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
“கோலி ரன் இயந்திரம் என உலகிற்கே தெரியும் ஒருவேளை உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறதோ” என்று ஒரு நெட்டிசன் பதிலடி கொடுத்தார்.
இன்னொருவர், “வாசகம் ‘அவர் அசாத்தியமான கிரிக்கெட் வீரர்’ என்று இருந்திருக்க வேண்டும்” என்று ட்விட்டியுள்ளார்.
மற்றொருவர், ‘எசெக்ஸ் அணியின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களை விடவும் கோலி சிறந்தவர்’ என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில், ‘கிரிக்கெட்டில் ‘இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் போன்று பழைய ஆட்களோ நீங்கள், 2009-ல் நீங்கள் இப்படி கூறலாம், ஆனால் இப்போது கோலி ஒரு லெஜண்ட்’ என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT