Last Updated : 04 Jul, 2018 12:16 PM

 

Published : 04 Jul 2018 12:16 PM
Last Updated : 04 Jul 2018 12:16 PM

நானா நடிக்கிறேன்..? என்னைக் கவிழ்க்க இப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள்: பிரேசில் நட்சத்திரம் நெய்மர் காட்டம்

ஒரேயொரு வீரரின் (நெய்மர்) அதீத நாடகீய நடத்தைகளால் தங்கள் அணி தோற்றது என்று மெக்சிகோ பயிற்சியாளர் நெய்மர் மீது கடும் குற்றச்சாட்டை வைக்க நெய்மர் பதிலடி கொடுத்துள்ளார்.

மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அன்று பிரேசிலிடம் தோற்று வெளியேறியது. அதில் மெக்சிகோ வீரர் மிகுயெல் லயுன், தேவையில்லாமல் நெய்மரின் ஆபரேஷன் நடந்த கணுக்கால் மீது தன் ஷூவை தேய்த்தார் அல்லது மிதித்தார், இது ரெட் கார்டு சம்பவமாகும், இதற்கு நெய்மர் வலிகாரணமாக எதிர்வினையாற்றினார். நெய்மர் மீது எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு, ஏனெனில் எப்போதும் எதிரணியினர் தன்னை ஃபவுல் செய்து கொண்டேயிருக்கின்றனர் என்பதாக அவர் கொஞ்சம் கூடுதலாக வினையாற்றுவதே. ஒரு தள்ளுக்கு 16 முறை பல்ட்டி அடித்ததைப் பார்த்தோம், தன் வினைத் தன்னைச் சுடும் என்பது போல் உண்மையிலேயே வலியால் துடித்தால் கூட அது நெய்மரின் நாடகீய சேட்டை என்பது போல் உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.

மெக்சிகோ பயிற்சியாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, “கால்பந்துக்கே அவமானகரமானது இது. ஒரேயொரு வீரரால் நிறைய நேரம் விரயம் செய்யப்படுகிறது. இதனால் எங்கள் ரிதம் கெட்டுப் போனது. கால்பந்து அரங்கில் நெய்மர் ஓர் எதிர்மறை உதாரணமாக விளங்குகிறார். அவரை பின் தொடரும் சிறுவர்களுக்கும் இது கேடாகும். இது வலுவான விளையாட்டு, ஆண்களின் விளையாட்டு, இதில் நடிப்பதற்கு வேலையே இல்லை” என்றார் ஒசாரியோ.

நெய்மர் இதற்கு பதிலடி கொடுக்கும்போது, “இவை என்னை கவிழ்ப்பதற்காகக் கூறப்படுவதேயன்றி வேறில்லை. நான் விமர்சனத்தை மதிப்பவனில்லை, பாராட்டுதலையும் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும்.

கடந்த 2 போட்டிகளாக நான் செய்தியாளர்களைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் அதிகம்பேர் ஏதேதோ பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பதற்றமடைகின்றனர். அவர்கள்தான் நடிக்கிறார்களோ? என் சகாக்களுடன் வெற்றிபெறவே இங்கு வந்துள்ளேன்” என்றார்.

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் பேட்டி 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x