Published : 03 Jan 2025 06:21 AM
Last Updated : 03 Jan 2025 06:21 AM
சென்னை: ஜன. 11, 12-ம் தேதிகளில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் செஸ் போட்டியை நடத்தவுள்ளது. சென்னை, மயிலாப்பூர் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த செஸ் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் மகளிர் மேனிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும். போட்டி காலை 8.00 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்.
ஆன்லைனில் பதிவு: 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் பிரிவுகள் போட்டிகள் நடத்தப்படும். இந்த செஸ் போட்டியில் பங்கேற்க விரும்பும் சிறார்களின் பெற்றோர், குழந்தைகளின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகிய தகவல்களை மின்னஞ்சல் வழியாக sfcorpcomm@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT