‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் இளம் வயதில் 150 ரன்களுக்கு மேல் விளாசி ஆயுஷ் மகத்ரே சாதனை

‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் இளம் வயதில் 150 ரன்களுக்கு மேல் விளாசி ஆயுஷ் மகத்ரே சாதனை

Published on

விஜய் ஹசாரே டிராபி தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - நாகலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஆயுஷ் மகத்ரே 117 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 181 ரன்கள் விளாசினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் (17 வயது 168 நாட்கள்) 150 ரன்களுக்கு முதல் குவித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் ஆயுஷ் மகத்ரே.

இதற்கு முன்னர் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் (17 வயது 219 நாட்கள்) கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக 150 ரன்களுக்குமேல் விளாசியதே சாதனையாக இருந்தது. 404 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நாகலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in