Published : 25 Dec 2024 07:55 AM
Last Updated : 25 Dec 2024 07:55 AM

கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் டிச.28-ல் சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடக்கம்

சென்னை: 30-வது சப்-ஜூனியர் நெட்​பால் சாம்​பியன்​ஷிப் போட்டி சென்னை அடுத்த கவரைப்​பேட்​டை​யில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளி​யில் வரும் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் உட்பட 27 மாநிலங்களை சேர்ந்த 54 அணிகள் கலந்து கொள்​கின்றன.

சிறுவர் பிரி​வில் 27 அணிகளும், சிறுமிகள் பிரி​வில் 27 அணிகளும் பங்கேற்று விளையாட உள்ளன. இரு பிரி​விலும் முதல் 3 இடங்களை பிடிக்​கும் அணிகளுக்கு கோப்​பைகள், பதக்​கங்​கள், சான்​றிதழ்கள் வழங்​கப்பட உள்ளன. இந்த போட்டியை இந்திய நெட்​பால் கூட்​டமைப்​பின் ஆதரவுடன் தமிழ்​நாடு அமெச்​சூர் நெட்​பால் சங்கம் மற்றும் ஆர்எம்கே பள்ளி இணைந்து நடத்து​கின்றன.

இந்தத் தொடரில் கலந்​து​கொள்​ளும் தமிழக ஆடவர் அணியின் கேப்​டனாக எஸ்.வைர​வேலும், மகளிர் அணியின் கேப்​டனாக லக்சனா சாய் யலமாஞ்​சி​யும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்தத் தகவலை சென்னை​யில் நேற்று நடைபெற்ற பத்திரி​கை​யாளர்கள் சந்திப்​பின் போது ஆர்எம்கே கல்வி குழு​மத்​தின் செயலாளர் யலமஞ்சி பிரதீப் தெரி​வித்​தார். உடன் தமிழ்​நாடு அமெச்​சூர் நெட்​பால் சங்கத்​தின் தலைவர் செல்​வ​ராசு இருந்​தார்.

இந்த தொடரின் இடையே வரும் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் கொரி​யா​வில் நடைபெற உள்ள ஆசிய இளையோர் நெட்​பால் சாம்​பியன்​ஷிப் தொடருக்கான இந்திய மகளிர் அணி தேர்வு நடைபெற உள்ளது. இந்த அணித் தேர்வு 29-ம் தேதி காலை 10 மணிக்கு கவரைப்​பேட்​டை​யில் உள்ள ஆர்​எம்கே உண்டு உறைவிட பள்​ளி​யில் உள்ள உள்​ளரங்க மை​தானத்​தில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x