Published : 09 Jul 2018 05:05 PM
Last Updated : 09 Jul 2018 05:05 PM

தோனியின் தனித்துவ வி.கீப்பிங் சாதனை; 2016-ம் ஆண்டு முதல் டி20-யில் இந்தியா: சுவையான தகவல்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கோலி தலைமை இந்திய அணி 2-1 என்று அபாரமாகக் கைப்பற்றியதன் மூலம் தொடர்ச்சியாக 6வது டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக 2-1 என்று கடந்த ஆண்டு தொடங்கிய வெற்றிப்பயணமாகும் இது, இதன் பிறகு இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளை இந்திய அணி வீழ்த்தியது.

முத்தரப்பு நிதஹாஸ் கோப்பையையும் வென்றது. அயர்லாந்து, இங்கிலாந்தை தற்போது வீழ்த்தியுள்ளது.

2016-ல் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது.

இதே ஆண்டில் இலங்கைக்கு எதிராக 2-1 என்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2-1 என்றும் வென்றது.

2017-ல் இங்கிலாந்தை 2-1, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-1 ட்ரா, நியூஸிலாந்துக்கு எதிராக 2-1, இலங்கையை 3-0, தென் ஆப்பிரிக்காவை 2-1, தற்போது இங்கிலாந்தை 2-1, அயர்லாந்தை 2-0 என்றும் வென்றுள்ளது இந்திய அணி.

ரோஹித் சர்மா, கொலின் மன்ரோ சாதனைகள்

நியூஸிலாந்தின் கொலின் மன்ரோ டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்துள்ளார், அந்தச் சாதனையை ரோஹித் சர்மா நேற்றைய சதம் மூலம் சமன் செய்து 3 சதங்களை எட்டியுள்ளார்.

2015-ல் தரம்சலாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 சர்வதேச சதத்தை எடுத்த ரோஹித் சர்மா, இலங்கைக்கு எதிராக இந்தூரில் 2வது சதத்தையும் முன்னதாக எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா:

ஹர்திக் பாண்டியா நேற்று டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தன் முதல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் 14 பந்துகளில் 33 ரன்களையும் விளாசினார். ஒரு டி20 போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரரானார் பாண்டியா. முன்னதாக டிவைன் பிராவோ இலங்கைக்கு எதிராக 31 ரன்களை எடுத்ததோடு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

தோனியின் தனித்துவ சாதனை:

தோனி முதன் முதலில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 5 கேட்ச்கள் எடுத்து சாதனை நிகழ்த்தினார். இங்கிலாந்தின் 9 அவுட்களில் தோனி 6 அவுட்களில் ரன் அவுட் உட்பட பங்களிப்புச் செய்தார் .இவருக்கு அடுத்தபடியாக ஒரு டி20 சர்வதேச போட்டியில் 5 பேரை அவுட்டாக்கிய விக்கெட் கீப்பர் மொகமது ஷேசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x