Published : 08 Dec 2024 09:18 AM
Last Updated : 08 Dec 2024 09:18 AM
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் நேற்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. டிங் லிரென் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். 36-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 10 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். 11-வது சுற்று இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT