Published : 07 Dec 2024 01:14 AM
Last Updated : 07 Dec 2024 01:14 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா யு-19 அணி

ஷார்ஜா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை யு-19 அணி 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்கே 69, ஷாருஜன் சண்முகநாதன் 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியா யு-19 அணி சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். கிரண், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய யு-19 அணி 21.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார். ஆயுஷ் மகத்ரே 34, முகமது அமான் 25, ஆந்த்ரே சித்தார்த் 22 ரன்கள் சேர்த்தனர்.

துபாயில் நாளை (8-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வங்கதேச அணி அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை // விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x