Published : 06 Dec 2024 03:27 AM
Last Updated : 06 Dec 2024 03:27 AM
சிங்கப்பூர்: போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 5 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன.
இந்நிலையில் நேற்று 9-வது சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளை காய்களுடன், டிங் லிரென் கருப்பு காய்களுடன் களமிறங்கினார்கள். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 54-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 10 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 5 சுற்றுகள் மீதம் உள்ளன. இன்று ஓய்வு நாளாகும். 10-வது சுற்று நாளை (7-ம் தேதி) நடைபெறுகிறது.
9-வது சுற்று முடிவடைந்த பின்னர் குகேஷ் கூறும்போது, “கடந்த சில ஆட்டங்களை நான் மிகச் விளையாட முடிந்தது. முக்கிய விஷயம் என்னவென்றால், அதே ஆற்றலுடன் போர்டுக்கு செல்லவேண்டும், நான் விளையாடும் அதே அளவிலான ஆட்டத்தை விளையாட வேண்டும். மேலும் சில முக்கியமான தருணங்களில் திறனை சற்று மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். இதுவரை இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருந்தது. நானும் சில வாய்ப்புகளை தவறவிட்டேன், டிங் லிரெனும் சில வாய்ப்புகளை தவறவிட்டார். நாங்கள் இருவருமே போராடும் குணத்தை வெளிப்படுத்தினோம். இன்னும் 5 அற்புதமான சுற்றுகள் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT