Published : 25 Jul 2018 04:25 PM
Last Updated : 25 Jul 2018 04:25 PM
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தில் இருக்கும் அனல் தன்மையினால் குல்தீப் பந்து வீச்சுக்குச் சாதகமாக சூழ்நிலைமைகள் இருக்கும் என்பதால் டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் ஆடுவது முக்கியம் என்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சச்சின் கூறியதாவது:
குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராகிவிட்டார் என்று நான் எப்போதிலிருந்தோ கூறி வருகிறேன். அவரிடம் உள்ள சுழற்பந்து ஆயுதங்கள், மற்றும் அதனை சரியான இடத்தில் வீசும் திறன் ஆகியவற்றினால் அவர் எப்போதுமே டெஸ்ட் போட்டிக்குத் தயார்தான். இதில் சந்தேகமேயில்லை.
இம்முறை இங்கிலாந்தில் வெயில் கொஞ்சம் அதிகம் உள்ளது, ஸ்பின்னர்களுக்கு சிறிதளவு உதவி இருக்குமேயானால் குல்தீப் யாதவ் இங்கிலாந்துக்கு சிலபல காயங்களை ஏற்படுத்துவார், இது மிகவும் முக்கியமான காரணியாகும்.
மேலும் இந்திய அணியில் பவுலிங் செய்ய கூடிய பேட்ஸ்மென்களும், பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்களும் உள்ளனர். பேட்டிங்கில் விக்கேட் கீப்பரின் பங்களிப்பும் முக்கியமானது. அஸ்வின், ஜடேஜாவும் பேட் செய்வார்கள். ஹர்திக் பாண்டியா மூலம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் நம்மிடையே இருக்கிறார்.
பேப்பரில் பார்க்கும் போது இந்திய அணி நல்ல பேலன்ஸான அணியாகவே தெரிகிறது.
எப்போதும் முழு 11 வீரர்களுடன் ஆடுவது பிரமாதமானது. காயங்கள் ஏற்படவே செய்யும், இது விளையாட்டில் சகஜமானதே. இது சவால்தான் ஆனால் அதனால் நம்மால் முடிவுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைக்கக் கூடாது. நம் அணி வெற்றி முடிவுகளை உருவாக்கும் திறமை கொண்டதே.
ஒருமுறை ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே இல்லாமல் டொராண்டோவில் போட்டிக்குச் சென்றோம். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக. ஆனால் பாகிஸ்தானை 4-1 என்று வீழ்த்தினோம்.
இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT