Published : 02 Dec 2024 02:43 AM
Last Updated : 02 Dec 2024 02:43 AM
சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஆடவர் பிரிவில் லக்சயா சென் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
லக்னோவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து 21-14, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வூ லுவோ யூவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கடைசியாக சிந்து பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் 21-6, 21-7 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஜியா ஹெங் ஜேசனை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார்.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் சீனாவிந் பாவோ லி ஜிங், லி கியான் ஜோடியை வென்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
ஆனால், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய், சாய் பிரதீக் ஜோடி 14-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுவாங் டி, லியி யாங் ஜோடியிடம் வீழ்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT