Published : 25 Nov 2024 05:58 PM
Last Updated : 25 Nov 2024 05:58 PM

புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி | ஐபிஎல் ஏலம் நாள் 2 அப்டேட்

புவனேஷ்வர் குமார்

ஜெட்டா: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தின் 2-வது நாளான திங்கள்கிழமை இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்ட வீரர் புவனேஷ்குமாரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ந்து லக்னோ அணி 2.20 கோடியிலிருந்து ஏலத்தை தொடங்கியது. இரு அணிகளும் போட்டி போட ரூ.10 கோடிக்கு வந்து நின்றது ஏலம். லக்னோ பின்வாங்க, மும்பை ரூ.10.25 கோடி கோரியது. அப்போது இடையில் வந்த ஆர்சிபி ரூ.10.75 கோடிக்கு புவனேஷ்வர் குமாரை தட்டி தூக்கியது.

அதேபோல, இந்திய அணியின் பவுலர் முகேஷ் குமாரை ஆர்டிஎம் முறையில் டெல்லி அணி ரூ.8 கோடிக்கு தங்க வைத்துக் கொண்டது. தீபக் சாஹர்ரூ. 9.25 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். ஆகாஷ் தீப் ரூ.8 கோடிக்கு லக்னோவால் வாங்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீபக் ஹூடாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.70 கோடிக்கு வாங்கியுள்ளது. ரூ.75 லட்சம் என்ற அடிப்படை விலையில் தொடங்கிய ஏலத்தை ஹைதராபாத் அணி ரூ.1.50 கோடி வரை கொண்டு சென்றது. இறுதியில் சிஎஸ்கே ரூ.1.70 கோடியில் தீபக் ஹூடாவை தட்டித் தூக்கியது. லக்னோ அணி ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகது. இளம் வீரர்களான முகேஷ் சவுத்ரி, ஷயீக் ரஷித் ஆகியோரை தலா ரூ.30 லட்சத்துக்கும், அன்ஷுல் கம்போஜை ரூ. 3.40 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.

புவனேஷ்வர் குமார்: 2009-ல் ஆர்பியுடன் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார் புவனேஷ்வர் குமார். ஆனால் இரண்டு சீசன்கள் அவர் விளையாடவில்லை. 2011-ல் புனே வாரியர்ஸில் சேர்ந்தார். தொடர்ந்து 2014-ல் அவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட ஒப்பந்தம் ஆனார். பவுலிங்கில் பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் ஆளுமை செலுத்திய புவனேஷ்வர் குமார், 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை பர்பிள் கேப் (அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான அங்கீகாரம்) பெற்றார். 2016-ல் ஹைதராபாத் அணி பட்டம் வெல்ல முக்கிய காரணியாக இருந்தவர் புவனேஷ்வர் குமார். தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் ஆர்சிபி அணிக்கு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இரண்டாம் நாளான இன்று 3.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் நியூஸிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன், க்ளன் பிலிப்ஸ் மற்றும் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், ரஹானே, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோரை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.வெஸ்ன் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை 1.50 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.

ஃபாப் டு பிளசிஸை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆர்சிபியிடம் ஆர்டிஎம் வாய்ப்பு இருந்தும் டு பிளசிஸை வாங்க அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. வாஷிங்டன் சுந்தரை ரூ.3.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட சேம் கரணை சிஎஸ்கே நிர்வாகம் ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சனுக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் போட்டிப்போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி போட்டிப்போட்டது. முடிவில் ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல்-ஐ வாங்க யாரும் முன்வரவில்லை.

கடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக ஆடிய க்ருணால் பாண்டியாவை ஆர்சிபி ரூ.5.75 கோடிக்கு வாங்கியது. அவரை வாங்க ராஜஸ்தான் அணி போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ராணாவை 4.20 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது. அவரை வாங்க ஆர்சிபி 4 கோடி வரை சென்ற நிலையில், ராஜஸ்தான் தட்டி தூக்கியது. | வாசிக்க > ரிஷப் பந்த் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ரூ.26.75 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி - ஐபிஎல் ஏலம் நாள் 1 ஹைலைட்ஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x