Published : 05 Nov 2024 11:14 AM
Last Updated : 05 Nov 2024 11:14 AM

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற இமானே கெலிஃப், ஆண் என்பதை உறுதி செய்யும் மருத்துவ அறிக்கையை பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். இது தற்போது இமானே கெலிஃப்பின் பாலினம் சார்ந்த சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் விளையாடிய ஆட்டத்தில், 46 நொடிகளில் ஏஞ்சலா வாக் அவுட் கொடுத்தார். இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண் என நடுவர்களிடம் ஏஞ்சலா தெரிவித்தார். இது சர்ச்சையானது. இருப்பினும் தான் பெண்ணாகப் பிறந்து, பெண்ணாகவே வாழ்கிறேன் என இமானே கெலிஃப் தெரிவித்தார்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இமானே கெலிஃப்பை சோதனை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தது. இருப்பினும் பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால் இமானே கெலிஃப் போட்டியில் பங்கேற்று, தங்கமும் வென்றார்.

மருத்துவர்கள் சௌமயா ஃபெடலா மற்றும் ஜாக்யூஸ் யங் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இமானே கெலிஃபுக்கு ‘5-ஆல்ஃபா ரிடக்டேஸ் குறைபாடு’ உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களிடையே காணப்படும் பாலியல் வளர்ச்சிக் கோளாறு என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்குள் டெஸ்ட்டிக்கல்ஸ் உள்ளது. மேலும், எக்ஸ்ஒய் குரோமோசோம்கள் இருப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த அறிக்கை தான் பிரெஞ்சு பத்திரிகையாளர் வசம் கிடைத்துள்ளது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து இமானே கெலிஃப் வசம் உள்ள ஒலிம்பிக் பதக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என சமூக வலைதள பயனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

— Piers Morgan (@piersmorgan) November 4, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x