Published : 04 Nov 2024 08:34 AM
Last Updated : 04 Nov 2024 08:34 AM
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் 1933-ம் ஆண்டில் விளையாடத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 91 ஆண்டுகளான நிலையில், இந்திய அணி முதன்முறையாக 0-3 என்ற கணக்கில் தொடரை உள்நாட்டில் முழுமையாக இழந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரு, புனே மற்றும் மும்பை என மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றது. உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா முழுவதுமாக இழப்பது இதுவே முதல்முறை. இந்த தொடர் மோசமான சாதனையாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.
இதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் இந்திய அணி, 0-2 என்ற கணக்கில் ஹான்ஸி குரோனியே தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியிடம் தொடரை முழுமையாக இழந்திருந்தது.
அதேபோல் 2012-ல் இங்கிலாந்து அணியிடம், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது. ஆனால், உள்நாட்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் முதன்முறையாக இந்திய அணி முழுமையாக தொடரை இழந்துள்ளது.
முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து விளையாடியுள்ள அணிகளில் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை நியூஸிலாந்து பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1958-59-ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்றது. ஆனால் இதில் 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. அதன் பின்னர் 1983-84-ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தத் தொடரிலும் 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT