Published : 24 Oct 2024 08:00 AM
Last Updated : 24 Oct 2024 08:00 AM

சென்னை - கோவா இன்று பலப்பரீட்சை | ஐஎஸ்எல்

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25ம் ஆண்டு சீசனில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று (24-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

எஃப்சி கோவா, 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளை பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் சென்னையின் எஃப்சி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. இதனால் அந்த அணி வெற்றியை தொடரும் முனைப்பிலும், எஃப்சி கோவா வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x