Last Updated : 07 Jun, 2018 09:18 AM

 

Published : 07 Jun 2018 09:18 AM
Last Updated : 07 Jun 2018 09:18 AM

‘கோல்மால்’ பனாமா

ந்த உலகக் கோப்பை தொட ரில் 2-வது அறிமுக அணியாக களமிறங்குகிறது பனாமா. மத்திய அமெரிக்க நாடான பனாமா தகுதி சுற்று போட்டியல் கோஸ்டா ரிகாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்ல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் தான் இருந்தது. ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்களே இருந்த நிலையில் பனாமாவின் கேப்ரியல் டோர்ரஸ் கோல் அடித்தார்.

ஆனால் பந்து கோல் எல்லைக் கோட்டை தொடவில்லை என்று கூறி கோஸ்டா ரிகா அணி நடுவரிடம் முறையிட்டது. இதற்கு செவிசாய்க்காத நடுவர் அதனை கோல் என்று அறிவித்தார். இந்த சர்ச்சை கோல் காரணமாகவே பனாமா அணி உலகக் கோப்பைக்குள் கால்பதித்துள்ளது. இந்த ஆட்டத்தில் பனாமா வெற்றி பெற்றதால் அமெரிக்க அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் அதிக வயதான வீரர்களை உள்ளடக்கிய அணி பனாமாதான். கோல்கீப்பர் ஜெமி பெனேடோ (36), டிபன்டர் பெலிப் பலோய் (37), பிளாஸ் பெரேஷ் (37), கேப்டன் ரோமன் டாரேஸ் (32) ஆகியோருடன் இளம் வீரர்களாக மைக்கேல் காமர்கோ (24), மைக்கேல் முரில் (22), ரிக்கார்டோ ஆவிலா (21) இடம் பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் இல்லாதது பனாமா அணிக்கு பெரிய பலவீனமாக உள்ளது. மேலும் அந்த அணி இடம் பெற்றுள்ள ஜி பிரிவில் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியம், இங்கிலாந்து இடம் பெற்றுள்ளன. இதே பிரிவில் உள்ள துனீசியா அணிகூட எதிரணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடியதுதான். இதனால் ‘ரெட் வேவ்‘ என செல்லமாக அழைக்கப்படும் பனாமா அணி முதல் சுற்றை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

அணியின் நட்சத்திர வீரராக ஜெமி பெனேடோ உள்ளார். தேசிய அணிக்காக 128 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். தொழில்முறை போட்டிகளில் இவர் பங்கேற்ற டைனமோ கிளப் அணி ருமேனியாவில் உள்ள முதல் டிவிஷன் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு கோப்பை வென்றிருந்தது. மேலும் கோல்டு கோப்பையில் 2005 மற்றும் 2013-ம் ஆண்டு தொடர்களில் ஜெமி பெனேடோ சிறந்த கோல்கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரு தொடர்களிலும் பனாமா அணி இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x