Published : 10 Oct 2024 07:27 AM
Last Updated : 10 Oct 2024 07:27 AM
ஆக்லாந்து: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக டாம் லேதம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த நட்சத்திர பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர், முதல்கட்ட போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆல்ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல் முதல் போட்டியில் மட்டும் கலந்து கொள்வார் எனவும், சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி கடைசி 2 டெஸ்ட்போட்டிக்கான அணியில் கலந்து கொள்ளஆயத்தமாக இருப்பார் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 24 முதல் 28-ம்தேதி வரை புனேவிலும், கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1 முதல் 5 வரை மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெற உள்ளது.
அணி விவரம்: டாம் லேதம் (கேப்டன்), கேன் வில்லியம்சன், டாம் பிளண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் போட்டி மட்டும்), மார்க் சாப்மேன், டேவன் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ரூர்க்கி, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2 மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி மட்டும்), டிம் சவுதி, வில் யங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT