Published : 10 Oct 2024 08:35 AM
Last Updated : 10 Oct 2024 08:35 AM

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் இந்திய அணி தோல்வி

அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதி சுற்றில், ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

ஜப்பான் அணிக்கு எதிரான மோதலில் முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி 2-3 (8-11 11-9 8-11 13-11 7-11) என்ற கணக்கில் போராடி மிவா ஹரிமோடோவிடம் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா3-0 (11-6 11-5 11-8) என்றகணக்கில் சட்சுகியை வீழ்த்தினார். இதனால் ஆட்டம் 1-1என சமநிலையை எட்டியது.

தொடர்ந்து நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி 0-3 (9-11 4-11 13-15) என்ற கணக்கில் மிமா இடுவிடம் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் மணிகா பத்ரா 1-3 (3-11 11-6 2-11 3-11) என்ற கணக்கில் ஹரிமோடோவிடம் வீழ்ந்தார். முடிவில் ஜப்பான் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரை இறுதியில் தோல்வி அடைந்த இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x