Published : 16 Jun 2018 06:25 PM
Last Updated : 16 Jun 2018 06:25 PM
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் நாளுக்குநாள் தேய்பிறையாகி வருவதையடுத்து முன்னாள் லெஜண்ட்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து அணுகியது.
தேசிய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு வியாழனன்று முத்தையா முரளிதரன், மகேலா ஜெயவர்தனே ஆகியோரை அணுகி அணிக்கு ஆலோசனை மட்டத்தில் பொறுப்பு வகிக்க முடியுமா என்று கேட்டது.
அதற்கு ‘சிஸ்டம் சரியில்லை, இதன் மீது நம்பிக்கையில்லை’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா ஆகியோரை அழைத்து சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என்பதுதான் முடிவு. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர மறுத்து சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி போல் கூறி ஒதுங்கிவிட்டனர்.
தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை ஏற்கெனவே தடுக்கி விழுந்த மே.இ.தீவுகளுக்கு எதிராக கடந்த வாரம் டெஸ்ட் போட்டியில் உதை வாங்கியது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆலோசனைக் குழு முடிவு குறித்து முரளிதரன் கூறும்போது, “இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது கிரிக்கெட் நிர்வாகம் கேவலமான ஒரு நிலையில் இருக்கும் போது எங்களைப் பயன்படுத்தப்பார்க்கிறது.
ஜெயவர்தனே, “இந்த சிஸ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT