Published : 29 Sep 2024 08:17 AM
Last Updated : 29 Sep 2024 08:17 AM

எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ரயில்வேஸ், ஐஓசி

சென்னை: எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ரயில்வேஸ் (ஆர்எஸ்பிபி), ஐஓசி அணிகள் முன்னேறியுள்ளன.

95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் ரயில்வேஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எச்ஓடி அணியை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ரயில்வேஸ் அணி தரப்பில் ஜோகிந்தர் சிங் 3 கோல்களும் (1, 38, 43-வது நிமிடங்கள்), யுவராஜ் வால்மீகி ஒரு கோலும் (16-வது நிமிடம்) அடித்தனர்.

மற்றொரு அரை இறுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐஓசி சார்பில் ஆர்மன் குரேஷி (36-வது நிமிடம்), சுமித் குமார் (46-வது நிமிடம்), குஜிந்தர் சிங் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். ராணுவ அணி தரப்பில் சிரில் லுகுன் 2 கோல்கள் (47 மற்றும் 57-வது நிமிடம்) அடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x