Published : 29 Sep 2024 12:57 AM
Last Updated : 29 Sep 2024 12:57 AM

ஐபிஎல் 2025 சீசனில் Uncapped வீரராக விளையாடும் தோனி? - பிசிசிஐயின் முக்கிய அறிவிப்பு

தோனி

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, Uncapped வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள 2025 - 27 ஐபிஎல் சைக்கிளுக்கான விதிகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு இதற்கு வலு சேர்க்கிறது.

சனிக்கிழமை அன்று ஐபிஎல் நிர்வாகக் குழு பெங்களுருவில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது. அதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 2025 சீசனை முன்னிட்டு 10 அணிகளும் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் விதிமுறைகளை வெளியிட்டார்.

சீசனுக்கு முந்தைய 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர், ஏலத்தில் Uncapped வீரராக கருதப்படுவார். அவர்கள் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்று இருக்க கூடாது. இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் அப்படியே தோனிக்கு பொருந்துகிறது.

தோனி, கடைசியாக இந்திய அணிக்காக 2019 ஜூலையில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கூட இல்லை. இந்த நிலையில் தான் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முன்வைத்த யோசனை என்றும் தெரிகிறது.

43 வயதான தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 4669 ரன்கள் எடுத்துள்ளார். 135 கேட்ச்கள் பிடித்துள்ளார். அவர் தலைமையிலான சிஎஸ்கே, ஐந்து முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. விதிகளில் மாற்றம் மேற்கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் சீசனில் தோனி விளையாடுவது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிவிக்க வேண்டி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x