Published : 29 Sep 2024 12:40 AM Last Updated : 29 Sep 2024 12:40 AM
IPL Retention: ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் - வீரர்களுக்கு போட்டி ஊதியம்
மும்பை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மெகா வரும் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகி உள்ள IPL Retention விதிமுறைகளில் வீரர்களுக்கு ஏல தொகை மட்டுமின்றி அவர்கள் பங்கேற்று விளையாடும் போட்டிகளின் அடிப்படையில் தனியாக ஊதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது ஹைலைட்டாக அமைந்துள்ளது. 2025 - 27 சீசன்களுக்கான பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து பார்ப்போம்.
10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் மெகா ஏலத்துக்கு முன்னதாக தற்போது தங்கள் அணியில் உள்ள 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அது Retention அல்லது ரைட் டூ மேட்ச் அடிப்படையில் இருக்கலாம்.
அணிகள் தக்க வைக்கும் அல்லது ரைட் டூ மேட்ச் முறையிலான 6 வீரர்களில் அதிகபட்சம் 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக (Capped) இருக்கலாம். இருவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களாக (Uncapped) இருக்கலாம்.
அணிகளுக்கான ஏலத்தொகை ரூ.120 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மேட்ச் பீஸ் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் வீரர்கள் விளையாடுகின்ற ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.5 லட்சம் பெற முடியும். இது ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களின் ஒப்பந்த தொகையுடன் சேராது. அதனால் ஒப்பந்த தொகை மற்றும் போட்டிக்கான ஊதியம் என வீரர்களின் வருமானம் கூடும்.
வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்துக்கு தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கு அடுத்த சீசனில் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு விலகினால் அவருக்கு தடை விதிக்கப்படும். அதோடு அடுத்த சீசன்களுக்கான ஏலத்தில் பங்கேற்க முடியாது.
சீசனுக்கு முந்தைய 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமால் உள்ள Capped வீரர், Uncapped வீரராக கருதப்படுவார். அவர்கள் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்று இருக்க கூடாது. இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
2025 முதல் 2027 சீசன் வரையில் இம்பேக்ட் வீரர் விதி தொடரும்.
WRITE A COMMENT