Published : 25 Sep 2024 07:29 AM
Last Updated : 25 Sep 2024 07:29 AM
சென்னை: 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓசி - ஒடிசா அணிகள் மோதின.
இதில் ஐஓசி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சுமித் குமார் (18-வது நிமிடம்), ரகுநாத் (28-வது நிமிடம்), குஜிந்தர் சிங் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. இந்திய ராணுவ அணி தரப்பில் கவுரவ் பக்தனி, அக்சய் துபே, சந்தன் மிந்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT