Last Updated : 13 Jun, 2018 09:52 AM

 

Published : 13 Jun 2018 09:52 AM
Last Updated : 13 Jun 2018 09:52 AM

நைஜீரிய அணியின் டிபன்ஸ் பலவீனம்

நைஜீரியா அணி 6-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது. அந்த அணி 1994, 1998, 2014-ம் ஆண்டு தொடர்களில் நாக் அவுட் சுற்றுவரை முன்னேறியிருந்தது. இம்முறை டி பிரிவில் இடம் பெற்றுள்ள நைஜீரியா கால் இறுதிக்கு முன்னேறுவதற்கு முயற்சி செய்யக்கூடும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் இதே பிரிவில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

உலகக் கோப்பை தொடர்களில் நைஜீரியா அணி இதற்கு முன்னர் குரோஷியா, ஐஸ்லாந்து அணிகளுடன் மோதியது இல்லை. அதேவேளையில் அர்ஜென்டினாவுடன் 3 முறை லீக் சுற்றில் விளையாடி நைஜீரியா தோல்வி கண்டுள்ளது. இந்தத் தோல்விகளுக்கு முடிவு கட்ட நைஜீரியா அதீத முயற்சி செய்யக்கூடும்.

இளம் வீரர்களை உள்ளடக்கிய நைஜீரியா அணி டிபன்ஸில் சற்று பலவீனமாக உள்ளது. இதை சரிசெய்ய பயிற்சியாளர் கெர்னாட் ரோர் ஏதேனும் திட்டம் வகுக்கக்கூடும். ஜான் ஓபி மைக்கேல், ஒடியன் ஜூட் இஹாலோ, அகமது முஸா, விக்டர் மோசஸ் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இவர்களில் முஸா, உலகக் கோப்பை தொடரில் இரு கோல்களை அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினாவுக்கு எதிராக இரு கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x