Published : 17 Sep 2024 12:12 PM
Last Updated : 17 Sep 2024 12:12 PM
பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிலியன் எம்பாப்பே உடன் விளையாடுவது நரகம் என ரியல் மாட்ரிட் கிளப் அணியில் உள்ள பிரேசில் வீரர்களுக்கு நெய்மர் ‘அலர்ட்’ கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்பாப்பே மற்றும் நெய்மர் என இருவரும் கடந்த 2017 முதல் 2023 வரையில் பிரான்ஸின் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக இணைந்து விளையாடியவர்கள். 136 போட்டிகளில் ஒன்றாக களம் கண்டுள்ளனர். இதில் நெய்மர் தற்போது அல்-ஹிலால் அணியிலும், எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியிலும் வருகின்றனர்.
இந்த சூழலில் ரியல் மாட்ரிட் அணியில் உள்ள பிரேசில் வீரர்கள் வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ மற்றும் மிலிடாவோ ஆகியோருக்கு நெய்மர் அலர்ட் கொடுத்துள்ளார் என்ற தகவலை பத்திரிகையாளர் சிரில் ஹனோனா பகிர்ந்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியில் உள்ள பிரேசில் வீரர்கள் அனைவரும் நெய்மரின் நண்பர்கள். களத்தில் எம்பாப்பேவும் நெய்மரும் இணைந்து செயல்பட்டிருந்தாலும் அவர்களுக்குள் பனிப்போர் இருந்ததாக ஹனோனா தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் எம்பாப்பே உடன் விளையாடுவது நரகம் என ரியல் மாட்ரிட் அணியில் உள்ள பிரேசில் வீரர்களிடம் நெய்மர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எம்பாப்பே 2022-ல் பேசி இருந்தார். ‘ஹாட் அண்ட் கோல்ட்’ என அப்போது அவர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நெய்மர் கால் பகுதியில் ஏற்பட்ட காய பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார். எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment