Published : 16 Sep 2024 09:41 AM
Last Updated : 16 Sep 2024 09:41 AM

45-வது செஸ் ஒலிம்பியாட்: 4-வது சுற்றிலும் இந்திய அணி அபார வெற்றி

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் 4-வது சுற்றிலும் இந்திய ஆடவர் அணியினர் வெற்றி கண்டனர்.

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் செர்பியாவை எதிர் கொண்டது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ் 85-வது காய் நகர்த்தலின் போது பிரட்கே அலெக்சாண்டரை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, செர்பியா வீரர் சரானா அலெக்ஸி ஆகியோர் இடையிலான ஆட்டம் 23-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 40-வது காய் நகர்த்தலின் போது இன்ட்ஜிக் வென்றார். அலெக்சாண்டரை 4வது ஆட்டத்தில் இந்தியாவின் விதித் குஜராத்தி 81-வது காய் நகர்த்தலின்போது இவிக் வெலிமிரை வீழ்த்தினார். முடிவில் இந்திய ஆடவர் அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.

மகளிர் பிரிவில் இந்திய அணி, பிரான்ஸுடன் மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவல்வி 52-வது காய் நகர்த்தலின்போது பிரான்ஸின் டவுலிட் கார்நெட் டெய்மான்டேவை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, மிலியட் சோபியுடனான ஆட்டம் 26-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

திவ்யா தேஷ்முக் அபாரம்: தொடர்ந்து திவ்யா தேஷ்முக் 3-வது ஆட்டத்தில் 56-வது காய் நகர்த்தலின் போது ஹெஜாஸி போர் மித்ராவையும், தானியா சச்தேவ் 50-வது காய் நகர்த் தலின்போது பென்மெஸ்பா நடாசாவையும் அபாரமாக வீழ்த்தினார். முடிவில் இந்திய மகளிர் அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணிக்கும் இது 4-வது வெற்றியாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x