Published : 12 Sep 2024 07:48 AM
Last Updated : 12 Sep 2024 07:48 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

ராஜ் குமார்

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது.

இதில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ராஜ் குமார் ஹாட்ரிக் கோல் (3, 25 மற்றும் 33-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். அரஜீத் சிங் ஹூன்டால் இரு கோல்களையும் (6 மற்றும் 39-வது நிமிடங்கள்), ஜுக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் சிங் (22-வது நிமிடம்), உத்தம் சிங் (40-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

மலேசிய அணி சார்பில் 34-வது நிமிடத்தில் அகிமுல்லா அனுவார் கோல் அடித்தார். ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி 9 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று கொரியாவுடன் மோதுகிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை 14-ம் தேதி எதிர்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x