Published : 14 Jun 2018 03:27 PM
Last Updated : 14 Jun 2018 03:27 PM
இன்று ஆப்கானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் எடுத்து ஷிகர் தவண் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
ஆனால் இதே சாதனையை அதிரடி தொடக்க வீரர் சேவாக் 3 முறை செய்திருப்பார், ஆனால் மூன்று முறையும் தவறவிட்டுள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 2006-ல் விரேந்திர சேவாக் கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக 99 ரன்கள் எடுத்தார், ஒரு ரன்னை எடுக்காததற்குக் காரணம் தனக்கு அப்படியொரு சாதனை இருப்பதை யாரும் கூறவில்லை என்றார் சேவாக்.
ஆனால் 2008-ல் இலங்கைக்கு எதிராக கால்லேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின், லஷ்மண் திராவிட் எல்லோரும் அஜந்தா மெண்டிஸிடம் மண்ணைக்கவ்வ விரேந்திர சேவாக் மட்டும் ஒருமுனையில் நின்று இரட்டைச் சதம் நாட் அவுட் ஆனார், அது விரைவு இரட்டைச் சதம் என்பதோடு சேவாக் தொடக்கத்தில் இறங்கி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அந்த இன்னிங்சில் சேவாக் உணவு இடைவேளைக்கு முன்னதாக 91 நாட் அவுட். இந்தமுறையும் சேவாக் உணவு இடைவேளைக்கு முன்னதான சதச் சாதனையைத் தவறவிட்டார்.
மூன்றாவது முறை 2010-11 நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகமாதாபாத்தில் 87 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் சேவாக். ஆகவே 3 முறையும் நாட் அவுட், ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதமெடுக்கும் வாய்ப்பு கைகூடாமல் போனது சேவாகுக்கு.
இந்தியாவின் மற்றொரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஃபரூக் இன்ஜினியர் 1966-67-ல் சென்னை டெஸ்ட் போட்டியில் பயங்கர பவுலிங் மே.இ.தீவுகளுக்கு எதிராக உணவு இடைவேளைக்கு முன் 94 நாட் அவுட் என்று இருந்துள்ளார்.
ஷிகர் தவண் ஒரு செஷனில் 100--கும் மேல் ரன்கள் எடுப்பது இது 3வது முறையாகும் டான் பிராட்மேன் 6 முறை இவ்வாறு செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT