Published : 25 Jun 2018 04:27 PM
Last Updated : 25 Jun 2018 04:27 PM
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தில் நேற்று பனாமாவை 6-1 என்ற கோக் கணக்கில் சிதைத்த இங்கிலாந்து இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது, இங்கிலாந்தின் ஹாரி கேன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
ஹாரி கேன் இதுவரை 5 கோல்களை அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியிம் உலகக்கோப்பை பெரிய வெற்றியாகும் இது. ஹாட்ரிக்கில் 2 பெனால்டி கிக்குகளாகும், இந்த வெற்றி மூலம் பெல்ஜியம் அணியும் இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது.
இந்தத் தோல்வி மூலம் மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் பெரும் உலகக்கோப்பைக் கனவு சிதைந்தது குரூப் ஜியில் 9 கோல்களை பனாமா வாங்கி வெளியேறியது.
ஆஃப் டைமின் போதே இங்கிலாந்து கடக்க முடியாத 5-0 என்ற முன்னிலை பெற்றது, ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன்ஸ் கார்னர் ஷாட்டை தன் மார்க்கருக்கும் போக்குக் காட்டி தலையால் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.
22வது நிமிடத்தில் பனாமாவின் எஸ்கோபார் இங்கிலாந்து வீரர் ஜெசி லிங்கார்டைத் தள்ளி விட பெனால்டி கிக் கிடைத்தது இதனை கேப்டன் ஹாரி கேன் கோலாக மாற்றினார்.
பிறகு 36வது நிமிடத்தில் லிங்கர்ட் மிக அருமையான ஒரு கோலை அடிக்க, 40வது நிமிடத்தில் ஃப்ரீ கிக்கில் மீண்டும் ஸ்டோன்ஸ் தன் இரண்டாவது கோலை அடிக்க இங்கிலாந்து 4-0 என்று முன்னிலை பெற்றது. பிறகு ஆஃப் டைம் நெருங்கும் சமயத்தில் மீண்டும் கேப்டன் ஹாரி கேன் பெனால்டி கிக்கில் 5வது கோலை அடித்தார். 62வது நிமிடத்தில் கேப்டன் ஹாரி கேன் ஃப்ளூக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தார், பந்து அவரது ஹீலில் பட்டு கோலுக்குள் சென்றது.
பனாமா அணிக்காக பிலிப் பேலாய் ஆறுதல் கோலை அடிக்க 6-1 என்று பனாமா சிதைந்தது:
சுவையான தகவல்கள்:
ஹாரி கேன் உலகக்கோப்பைக் கால்பந்தில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தும் 3வது இங்கிலாந்து வீரர் ஆவார். ஜெஃப் ஹர்ஸ்ட் 1966-ல் ஜெர்மனிக்கு எதிராகவும், கேரி லினேகர் 1986-ல் போலந்துக்கு எதிராகவும் உலகக்கோப்பை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர்களாவர்.
ஆஃப் டைமுக்கு முன்னதாக 5 கோல்கள் அடிப்பது இது 5வது முறையாகும் கடைசியாக, 2014 உலகக்கோப்பையில் ஒருதேசமே கண்ணீரில் ஆழ்ந்த பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில்ல் ஜெர்மனி இடைவேளைக்கு முன்பாகவே 5 கோல்களை சாத்தியது.
பனாமா 9 கோல்களை 2 ஆட்டங்களில் மொத்தமாக வாங்கியது 2வது அதிகபட்ச கோல் வாங்கலாகும், 1974ல் ஹைட்டி அணி 10 கோல்களை 2 போட்டிகளில் வாங்கியதையட்யடுத்து பனாமா அணி 9 கோல்களை வாங்கியுள்ளது.
107 பாஸ்களுடன் கைல் வாக்கர் அதிக பாஸ்களைச் செய்த வீரராகத் திகழ்கிறார், இதில் எதிரணியினர் பகுதியில் 55 பாஸ்கள். அதே போல் 120 முறை பந்தை டச் செய்துள்ளார் 6 முறை கிளியர் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT