Published : 29 Aug 2024 07:41 AM
Last Updated : 29 Aug 2024 07:41 AM
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. பூபதி வைஷ்ண குமார் 63, சோனு யாதவ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த டிஎன்சிஏ லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பூபதி வைஷ்ண குமார் 82, சோனுயாதவ் 39, அஜித் ராம் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஹிமான்ஷு சிங் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய மும்பை அணி ஆட்ட நேர முடிவில் 59.1 ஓவரில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திவ்யான்ஷ் சக்சேனா 61 ரன்கள் சேர்த்தார்.
நட்சத்திர வீரர்களன ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்னில் சாய் கிஷோர் பந்திலும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களில் அஜித் ராம் பந்திலும் நடையை கட்டினர்.
டிஎன்சிஏ லெவன் தரப்பில் சாய் கிஷோர், லக்சய் ஜெயின் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அஜித் ராம் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT