Published : 24 Aug 2024 09:04 AM
Last Updated : 24 Aug 2024 09:04 AM
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட்- ஹைதராபாத் அணி கள் இடையிலான போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் 178 ரன்களும், ஹைதராபாத் அணி 293 ரன்களும் எடுத்தன. 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜார்க் கண்ட் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 49.2 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ரோஹித் ராயுடு 3, தனய் தியாகராஜன் 2 விக்கெட்கள் கைப் பற்றினர். 26 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் -பரோடா அணிகள் மோதின. பரோடா முதல் இன்னிங்ஸில் 255ரன் களும். ஜம்மு & காஷ்மீர் 114 ரன்களும் எடுத்தன. 141 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி 58.3 ஓவர்களில் 254 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 396 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 36 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. இதனால் பரோடா அணி 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேலத்தில் நடைபெற்று வரும் இந்தியன்ரயில்வேஸ் அணிக்கு எதி ரான ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசி டெண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 459ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ரயில்வே அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 97 ஓவர்களில் 355 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிரம் சிங் 143, முகமது சைஃப் 104 ரன்கள் சேர்த்தனர். டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி தரப்பில் ஜாதவேத் சுப்ரமணியன் 5, சித்தார்த் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
104 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 37 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப் புக்கு 133 ரன்கள் எடுத்தது. ராதாகிருஷ்ணன் 82, விமல் குமார் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கோவையில் ஹரியானா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த ஹரியானா அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 78.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிக பட்சமாக தீரு சிங் 74, ஜெயந்த் யாதவ் 65 ரன்கள் சேர்த்தனர்.
டிஎன்சிஏ லெவன் அணி தரப்பில் சாய் கிஷோர் 7 விக்கெட்கள் வீழ்த்தினார். 175 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன் னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ லெவன் அணி 56 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பாபா இந்திரஜித் 74. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 44 ரன்கள் சேர்த்தனர். 353 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹரியானா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT