Published : 22 Aug 2024 02:41 PM
Last Updated : 22 Aug 2024 02:41 PM

இந்திய அணியின் பிரச்சினை என்ன? - கம்பீரின் உதவிப் பயிற்சியாளர் மனம் திறப்பு

டென் டஸ்சேத் உடன் கவுதம் கம்பீர் | கோப்புப் படம்

2023 ஐசிசி உலகக் கோப்பையில் தொடர் வெற்றிகளாகக் குவித்து இறுதிப் போட்டி வரை வந்து தோல்வி அடைந்த ரோஹித் சர்மா தலைமை இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு கவுதம் கம்பீர் பயிற்சிப் பொறுப்பில் இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது. இதன் காரணங்களை கம்பீரின் உதவிப் பயிர்சியாளர் டென் டஸ்சேத் கூறியுள்ளார்.

அதாவது, சமீப காலங்களாக இந்திய அணி ஒரு விஷயத்தைத் தவறவிட்டு விட்டது என்றும் அதில் கவனம் செலுத்தாமைதான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்றும், இதனை உடனடியாகச் சரியாக்கவில்லை எனில் இன்னும் தோல்விகளைத்தான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “இந்திய அணி சில ஆண்டுகளாகவே அயல்நாடுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தனர், அதில் இந்திய அணியின் பலமான ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆடுவது என்ற பலம் காணாமல் போய் விட்டது. ஸ்பின் பவுலிங்கை ஆடுவது என்பதை இந்திய அணி வீரர்கள் கண்டு கொள்ளாமல் தங்கள் பலத்திலிருந்து விலகிச் சென்று விட்டனர்.

இலங்கையில் இந்திய அணி தோல்வி கண்டது, ஸ்பின் பவுலிங்கிற்கு எதிரான பலத்திலிருந்து திசைமாறிவிட்டனர். வெளிநாடுகளின் வேகப்பந்து வீச்சு பிட்ச்களில் வெற்றி பெற கவனத்தை மேற்கொண்டனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெல்ல வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதனால் ஸ்பின் ஆடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய அணி உலகின் சிறந்த ஸ்பின் பிளேயர்கள் என்பதற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே என் பணி” என்று கூறியுள்ளார் டென் டஸ்சேத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x