Published : 22 Aug 2024 08:46 AM
Last Updated : 22 Aug 2024 08:46 AM
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - ஹரியானா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது.
பாபா இந்திரஜித்197 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13பவுண்டரிகளுடன் 139 ரன்கள் விளாசிய நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். லோகேஷ்வர் 203 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 60.2 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்தது.
டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - இந்தியன் ரயில்வேஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பிரெசிடெண்ட் லெவன் அணி முதல் நாள் ஆட்டத்தில் 85.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 81, முகமது அலி62, மாதவ பிரசாத் 47, விமல் குமார் 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியன் ரயில்வேஸ் அணி தரப்பில் பந்துவீச்சில் அயன் சவுத்ரி 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT