Published : 25 May 2018 06:15 PM
Last Updated : 25 May 2018 06:15 PM
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் ஸ்விங் சாதக பிட்சில் இங்கிலாந்து 184 ரன்களுக்குச் சுருண்டது.
பாகிஸ்தானின் மொகமத் அப்பாஸ், ஹசன் அலி ஆகிய ஸ்விங் பவுலர்கள் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அலிஸ்டர் குக் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்களை கடினமான பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தார், இவருக்கு அடுத்த படியாக பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களை எடுத்தார், ஜானி பேர்ஸ்டோ 27 ரன்களுக்கு சிறப்பாக ஆடினார், ஆனால் ஃபாஹிம் அஷ்ரபின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் டேவிட் லாய்ட் தனது பத்தி ஒன்றில் கூறியதாவது:
இன்னொரு இங்கிலாந்து சரிவு. மூவ் ஆகும் பந்துகளுக்கு தங்களை திறம்பட தயார் செய்து கொள்ளவில்லை இங்கிலாந்து வீரர்கள். மூவிங் பந்துக்கு எதிராக இவர்களது உத்தியில் தவறு இருக்கிறது.
ஆக்லாந்தில் 58 ஆல் அவுட் ஆன நினைவுதான் எனக்கு வருகிறது. அதேதான் லார்ட்சிலும் தற்போது நடைபெற்றுள்ளது, பந்தை கொஞ்சம் முன்னால் பிட்ச் செய்து ஆடும்படி செய்தால் நாங்கள் எட்ஜ் செய்து விடப்போகிறோம். ஆட்டமிழந்தவர்களின் பிட்ச் வரைபடத்தைப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.
ஜோ ரூட் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்திருக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கேப்டன் தான் எடுக்கும் முடிவில் திறம்பட செயல்படுவதுதான் அவசியம், பேட்டிங் தேர்வா பேட்டிங்கை திறம்படக் கையாள வேண்டும்.
இங்கிலாந்து தளர்வாக ஆடியது, கேப்டன் ஜோ ரூட் அவுட் ஆனதையே பார்த்தால் பந்தை தொட அவர் நீட்டி முழக்கி முயற்சித்தார், ஆனால் எட்ஜ் செய்தார். இப்படி ஆடிவிட்டு “நாங்கள் இப்படித்தான் ஆடுவோம்” என்று கூறுவது பயன் தராது. அலிஸ்டர் குக் வழக்கம் போல் அதிகவனத்துடன் ஆடினார். ஆனால் அவர் யாரிடம் பயிற்சி ஆலோசனை பெற்றார் என்று தெரியவில்லை கட் ஷாட்டை ஆடவில்லை. நான் தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் கட் ஷாட் இல்லாத குக் இன்னிங்ஸைப் பார்க்க முடியுமா? எல்லாப் பந்துகளுக்கும் முன்னால் வந்து ஆடினார், அதாவது தன்னை பவுலர்கள் ஒர்க் அவுட் செய்வதைப் புரிந்து வைத்திருக்கிறார் குக்.
பாகிஸ்தான் இங்கிலாந்து வீரர்கள் குறித்து ஹோம் வொர்க் செய்துள்ளனர். நல்ல வேகத்தில் வீசினர். மொகமது அப்பாஸ், ஹசன் அலி விக்கெட் டு விக்கெட் வீசினர். வேகம், ஸ்விங். யார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது? அசார் மஹ்மூதுதான். ஏனெனில் அவர் இங்கிலாந்தில் ஏகப்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். லார்ட்ஸ் பிட்சில் ஒரு முனை சரிவாக இருக்கும் அதில் எப்படி வீச வேண்டும் என்பதையெல்லாம் அசார் மஹ்மூத் பாடம் கற்பித்துள்ளார். மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு கூறியுள்ளார் டேவிட் லாய்ட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT