Published : 16 Aug 2024 07:31 AM
Last Updated : 16 Aug 2024 07:31 AM

ரயில்வேஸ் அணி 429 ரன் குவிப்பு

நிஷாந்த் சிந்து

சென்னை: அகில இந்திய அளவில் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட் செய்த மத்திய பிரதேசம் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுபம் குஷ்வா 87, அர்ஹாம் அகில் 57 ரன்கள் சேர்த்தனர். ஜார்க்கண்ட் அணி தரப்பில் ஷுபம் சிங், சவுரப் சேகர், விவேக் ஆனந்த் திவாரி, ஆதித்யா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் - குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ரயில்வேஸ் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 429 ரன்கள் குவித்தது.

பிரதம் சிங் 130, விவேக் சிங்104, ஷிவம் சவுத்ரி 88, முகம்மது சைஃப் 57 ரன்கள் விளாசினர். குஜராத் அணி தரப்பில் சித்தார்த் தேசாய் 3, சிந்தன் கஜா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியானா - மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹரியானா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிஷாந்த் சிந்து 91, தீரு சிங் 130 ரன்கள்சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் சில்வெஸ்டர் டி'சோசா, அதர்வா அன்கோலேகர், ஜூனைத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x