Published : 08 Aug 2024 07:26 AM
Last Updated : 08 Aug 2024 07:26 AM

இறுதி போட்டியில் சர்வேஷ் முதல் அன்னு ராணி வெளியேற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்

அன்னு ராணி

இறுதி போட்டியில் சர்வேஷ்: ஆடவருக்கான உயரம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே 2.15 மீட்டர் உயரம் தாண்டி ‘பி’ பிரிவில் 13-வது இடமும், ஒட்டுமொத்தமாக 25-வது இடமும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கோஸ்வாமி விலகல்: மராத்தான் நடை பந்தயம் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சுராஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி ஜோடி பாதியில் விலகியது. இந்த பந்தயம் 41.4 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும்.

அன்னு ராணி வெளியேற்றம்: மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் அன்னு ராணி 55.81 மீட்டர் தூரம் எறிந்து ‘ஏ’பிரிவில் 15-வது இடமும், ஒட்டுமொத்தமாக 26-வது இடமும் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெறத் தவறினார்.

ஜோதி யார்ராஜி 35-வது இடம்: மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஹீட்ஸில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 13.16 விநாடிகளில் கடந்து 4-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 40 பேர் கொண்ட பந்தயத்தில் அவர், 35-வது இடத்தை பெற்று நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். எனினும் மற்றொரு வாய்ப்பாக இன்று நடைபெறும் ரெப்பேஜேஜ் பிரிவில் அவர், கலந்து கொள்கிறார்.

கால் இறுதியில் இந்தியா தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் மகளிர் அணிகள் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அன்டிம் பங்கல் வெளியேற்றம்: மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்டிம் பங்கல் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கியின் யெட்கில் செய்நெப்புடன் மோதினார். இதில் அன்டிம் பங்கல் 0-10 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x